மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து சந்தேகம் ஏற்படுத்திய எதிர்க்கட்சிகள் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பீகார் மாநிலம் அராரியாவில் நடைபெற்றப் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி,
காங்கிரஸ் ஆட்சியில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் தற்போது அனைத்து தரப்பு மக்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்வதாக தெரிவித்தார்.
இண்டி கூட்டணி தலைவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை அகற்ற தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறினார்.
வாக்கு சீட்டு முறை மீண்டும் வராது என உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய பிரதமர், இதன் மூலம் இண்டி கூட்டணி தலைவர்களின் கனவு தகர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தியதற்காக பொது மக்களிடம் எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.