பெரம்பலூர் அருகே சொத்திற்காக தந்தையை மகன் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேல் என்பவரிடம் அவரது மகன் சக்திவேல், சொத்தைப் பிரித்து கொடுக்குமாறு அவ்வப்போது தகராறு செய்தும், தாக்குதல் நடத்தியும் வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 17 -ஆம் தேதி குழந்தைவேல் தனது படுக்கையறையில் உள்பக்கமாக தாளிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இதனிடையே, குழந்தைவேலை அவரது மகன் சக்திவேல் கண்மூடித் தனமாக தாக்கும் சிசிடிவி காட்சி போலீசார் வசம் கிடைத்துள்ளது.
அதன் பேரில், விசாரணை நடத்திய போலீசார், சக்திவேலை கைது செய்தனர்.