புதுக்கோட்டை : சமாதி இடத்தை வீட்டுமனை பட்டாவாக வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள்!
Aug 31, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுக்கோட்டை : சமாதி இடத்தை வீட்டுமனை பட்டாவாக வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள்!

Murugesan M by Murugesan M
Oct 4, 2025, 12:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுக்கோட்டை அருகே திமுக முன்னாள் அமைச்சர் ஆலங்குடி சுப்பையாவின் சமாதி உள்ள இடத்தை, வீட்டுமனை பட்டாவாக வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கரும்பிரான்கோட்டையை சேர்ந்த சுப்பையா என்பவர் 1967 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் ஆலங்குடியில் வெற்றி பெற்றவர்.

1969ல் கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது அறநிலையத்துறை, வீட்டுவசதி மற்றும் இடவசதி கட்டுப்பாடு துறைகளுக்குச் சுப்பையா அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1976ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் சுப்பையா உயிரிழந்த நிலையில் கரும்பிரான்கோட்டையில் சுப்பையாவின் வீட்டின் அருகே உள்ள புறம்போக்கு இடத்தில் உடல் புதைக்கப்பட்டு சமாதி கட்டப்பட்டது.

காலப்போக்கில் இந்தச் சமாதி சிதிலமடைந்ததால் சில தினங்களுக்கு முன்பு சமாதியைச் சீரமைக்க சுப்பையாவின் குடும்பத்தினர் சென்றனர்.

அப்போது அங்கு வந்த ஒருவர், சமாதி உள்ள இடத்தில் அதிகாரிகள் தனக்கு வீட்டுமனை பட்டா வழங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், புதுக்கோட்டை வட்டாட்சியரிடம் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம், திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Pudukkottai: Revenue officials have granted the land where the former DMK minister's samadhi is located as a housing pattaவருவாய்த்துறை அதிகாரிகள்
Share
Tweet
SendShare
Previous Post

மகாராஷ்டிரா : ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு – கொள்ளையனை துரிதமாக பிடித்த ராணுவ வீரர், ரயில்வே போலீசார்!

Next Post

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா நிச்சயதார்த்தம்?

Related News

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம் – அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க முடிவு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies