மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்திலுள்ள நரன்சேனா பகுதியில், குக்கி இனத்தவர்கள் நடத்திய தாக்குதலில், 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
பள்ளத்தாக்கில் இருந்த சிஆர்பிஎஃப் முகாம் மீது மலைப்பகுதியில் இருந்து குக்கி இனத்தவர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
நள்ளிரவு 12.30 மணியளவில் தொடங்கிய இந்தத் தாக்குதல், 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை நடைபெறுவதாக மணிப்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.