தாய்மொழியில் பொறியியல் கல்வி: அதிகரிக்கும் ஆர்வம்!
Sep 1, 2025, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய்மொழியில் பொறியியல் கல்வி: அதிகரிக்கும் ஆர்வம்!

Web Desk by Web Desk
Apr 27, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொறியியல் கல்வியை தாய்மொழியில் படிக்கலாம் என்று பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு அறிவித்ததன் விளைவாக, தற்போது தாய்மொழியில் பொறியியல் படிப்புகளில் சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.

பள்ளித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கூட, பொறியியல் படிப்பில் பிரகாசிக்க முடியாமல் போவதற்கு காரணம், ஆங்கில மொழியின் மீதான அச்சம் . எனவே பொறியியல் படிக்க ஆசை இருந்தும் மாணவர்கள் பலர் தொழில்நுட்பக் கல்வியில் சேராமல் புறக்கணித்து விடுகின்றனர்.

இதனை. கருத்தில் கொண்டு ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், மாணவர்களிடையே கருத்து கணிப்பு நடத்தியது.

அதில், பொறியியல் படிப்புகளை மாணவர்கள் ஆங்கிலத்தில் கற்க விரும்புகின்றனரா அல்லது மாநில மொழிகளில் கற்க விரும்புகின்றனரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. 42 சதவீத மாணவர்கள், மாநில மொழிகளிலேயே பொறியியல் படிப்புகளை படிக்க விரும்புவதாக தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் , புதிய தேசிய கல்விக் கொள்கையின் படி , தொழில்நுட்பக் கல்வியைப் படிக்க ஆங்கிலம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, மூன்று ஆண்டுகளுக்கு முன் பொறியியல் கல்வியை மாநில மொழிகளில் கற்க பிரதமர் மோடி தலைமையிலான ஒரு முக்கிய முடிவு எடுத்தது.

2021ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி பிரதமர் மோடி , இந்த அறிவிப்பை வெளியிட்டார். அறிவிப்போடு இல்லாமல் , 2012ம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி மத்திய அரசின் நிதி பெறும் 106 தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களின் இயக்குனர்களுடன் கலந்துரையாடினார்.

மாநில மொழிகளில் பொறியியல் கல்விப் பயிற்றுவிப்பதற்கான அவசியம் , தொழில் கல்வித் துறையில் முன்னிற்கும் சவால்கள் மற்றும் அந்த சவால்களை சமாளிப்பதற்கான செயல் திட்டங்கள் பற்றியும் பிரதமர் மோடி அந்தக் கூட்டத்தில் விளக்கினார்.

இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மலையாளம், பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி மற்றும் ஒடியா ஆகிய 11 மாநில மொழிகளில் தொழில் நுட்பக் கல்வி பயில, பயிற்றுவிக்க அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்தது.

இதன் தொடர்ச்சியாக , முதல் கட்டமாக , தமிழ் உட்பட எட்டு மாநில மொழிகளில் பொறியியல் படிப்புகளை பயிற்றுவிக்க கல்லுாரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் 18 தனியார் கல்லூரிகள் உட்பட 22 பொறியியல் கல்லூரிகளில் மாநில மொழிகளில் தொழில் நுட்ப கல்வி படிக்க 2,580 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் தகவல் அறிக்கையின் படி , தாய்மொழியில் தொழில் நுட்ப படிப்புகளில் சேர்க்கை ஒட்டுமொத்தமாக உயர்ந்துள்ளது.

2021-22 கல்வியாண்டில் மொத்தம் 80 சதவீத இடங்கள் காலியாக இருந்து நிலை மாறி 2022-23 கல்வியாண்டில் காலியான இடங்கள் 53 சதவீதமாக குறைந்துள்ளது.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது தமிழ்நாடு, ஆந்திரா, மற்றும் உத்தர பிரதேசத்தில் இந்த தாய் மொழியில் தொழில்நுட்ப கல்வி நல்ல ஆதரவைப் பெற்றுள்ளது என்பதை மானவர்கள் சேர்க்கையில் இருந்தே கண்கூடாக காண முடிகிறது .

இந்த புதிய நடைமுறையால் மாநில மொழியில் கல்வி கற்பதோடு , அந்தந்த மாநில பண்பாட்டுடனும் பெற்ற கல்வியறிவை தேசத்துக்கு பயன்படுத்தும் எண்ணமும் மாணவர்களிடையே உருவாகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முக்கிய சாதனைகளில் முதன்மையான சாதனை இது. அடுத்த தலைமுறையினருக்கு நல்ல வாழ்வும் வளமும் சேரும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

நிறைய தொழில் நுட்ப அறிஞர்கள் தேவைப்படும் சூழலில் அதுவும் தாய்மொழியில் தொழில் நுட்ப கல்வி பெற்ற அறிஞர்கள் இந்தியாவில் உருவாகும்போது, உலகத்துக்கே பாரதம் விஸ்வ குரு ஆவது நிச்சயம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Tags: Increasing interest in engineering education in mother tongue!
ShareTweetSendShare
Previous Post

மாமூல் கேட்டு மிரட்டுவதாக திருநங்கைகள் புகார்!

Next Post

சிப்காட் ரத்து கோரி பதிவு தபால் மனு அனுப்பும் போராட்டம்!

Related News

தென்காசி : நீர்வரத்து சீரானதால் பேரருவியில் குளிக்க அனுமதி!

கேரளா : கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை!

டீ, காபி விலை உயர்வு குறித்து சென்னைப் பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்!

தூத்துக்குடி அருகே அச்சுறுத்தும் விதமாக ரீல்ஸ் வெளியிட்ட ரவுடி கைது!

என்டிஏ கூட்டணியில் தான் தினகரன் உள்ளார் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஆப்கானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 500க்கும் மேற்பட்டோர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

மேகமலை அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

கிருஷ்ணகிரி : 6 மாத குழந்தையை கடத்தி சென்ற பெண் கைது!

பாஜக பெண் நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த திமுக நகர மன்ற தலைவி!

உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் – பிரதமர் மோடி

குடியரசு தலைவர் வருகை – டிரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவு!

காஷ்மீரி பண்டிட்களுக்கு சொந்தமான சாரதா பவானி கோயில் – 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறப்பு!

மிசோராமில் ரூ. 8,071 கோடி செலவில் அமைக்கபட்டுள்ள ரயில் பாதை – பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வந்தால் மட்டுமே இந்து மதத்தினருக்கு பாதுகாப்பு – அண்ணாமலை

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies