மும்பை – புனே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து வடகான் என்ற இடத்தில் திடீரென தீப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்த 36 பயணிகளும் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கி உயிர் தப்பினர்.
பின்னர் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.