ஆந்திர மாநிலம், அன்னமய்யா பகுதியில் தெலுங்கு தேசக் கட்சியின் பிரச்சார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திரா மாநிலத்தில் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிந்தபர்த்தி பகுதியில் தெலுங்கு தேசக் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது முகமுடி அணிந்த 2 மர்ம நபர்கள் பிரச்சார வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடினர்.
இந்த சம்பவத்தில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.