அடுத்து வரும் தேர்தலில் நிச்சயம் வாக்களிப்பேன் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
ராமம் ராகவம் திரைப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சூரி, சமுத்திரக்கனி இயக்குனர்கள் பாலா, பாண்டியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் சூரி,
இந்த முறை தேர்தலில் வாக்களிக்காமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளது எனவும் அடுத்து வரும் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிப்பேன் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், விடுதலை முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் மிகச் சிறப்பாக வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.