தென்னிந்தியாவில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு குறைந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்தியாவில் 42 நீர்த்தேக்கங்களின் மொத்த நேரடி சேமிப்புத் திறன் 53.334 பில்லியன் கன மீட்டராக உள்ளதாக மத்திய நீர் ஆணையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் சேமிப்பு அளவு 17 சதவீத கொள்ளளவில் மட்டுமே உள்ளது.
இது வரலாற்று சராசரியை விட கணிசமாகக் குறைவாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.