நாமக்கல் மாவட்டம், வளையபட்டியில் சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு பதிவு தபால் மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
வளையபட்டி சுற்றுப்புற பகுதிகளில் சிப்காட் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தால் விவசாய நிலம் பாதிக்கும் என கூறி, வளையபட்டியில் உள்ள அஞ்சல் அலுவலகம் முன்பு சிப்காட் எதிர்ப்பு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனையடுத்து சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழக ஆளுநர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு பதிவு தபால் மனு அனுப்பினர்.