உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் காட்டு தீ வேகமாக பரவி வரும் நிலையில் தீயணைப்பு பணிகளை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார்.
நைனிடால் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே உள்ள காட்டில் ஏற்பட்ட தீ, வேகமாக பரவி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 31 புதிய காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகி, 33.34 ஹெக்டேர் வனப்பகுதி சேதமாகியுள்ளது.
காட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.