சிவகங்கையில் வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வ.ஊ.சி தெருவை சேர்ந்த சிவசங்கரன். ஆயுதப்படை முதல் நிலைக்காவலராக பணியாற்றிய இவர், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம் போல் பணி முடித்து விட்டு வீடு திரும்பிய அவர் காலையில் வெளிவராததை கண்ட அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து பார்த்தனர்
அப்போது சிவசங்கரன் துக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கூராய்விற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.