அரியலூரில் ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியை முதலை கடித்ததில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜெயங்கொண்டம் அருகே நடுக்கஞ்சங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னம்மா. இவர் வழக்கம்போல கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் ஆடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த முதலை மூதாட்டியின் காலை கடித்து குதறியுள்ளது. சின்னம்மாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள், மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.