சிவகங்கையில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய அதிமுக முன்னாள் கவுன்சிலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காரைக்குடியில் அதிமுக முன்னாள் கவுன்சிலரான சண்முகமணி, ஆறுமுகம் என்ற நபரை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருவண்ணாமலையில் பதுங்கி இருந்த சண்முகமணி மற்றும் அவரது கூட்டாளியான ஸ்ரீராம் ஆகியோரை கைது செய்தனர்.
















