திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்து பீரோவை உடைத்து 15 சவரன் தங்க நகையை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேட்டப்பட்டை சேர்ந்த லோகநாதன் – சத்யா தம்பதி, தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே நுழைந்து, பீரோவை உடைத்து அதிலிருந்த 15 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.