வாகன பதிவெண் பலகையில் விதிமுறைகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் மே.2-ஆம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
தனியார் வாகனங்களின் வாகன பதிவெண் பலகையில் விதிமுறைகளை மீறி ஸ்டிக்கர்கள், சின்னங்கள் அல்லது குறியீடுகள் வடிவில் ஒட்டுவது சட்டப்படி குற்றமாகும். சிலர் இதனை தவறாக பயன்படுத்தி தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர்.
எனவே வாகனங்களில் ஒட்டப்பட்டிருக்கும் இத்தகைய ஸ்டிக்கர்களை நீக்க மே1-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மே 2-ஆம் தேதி முதல் வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் 500 ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.