கென்யாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மகுவேனியா பகுதியில் இருந்து பாதுகாப்பு பகுதிக்கு செல்ல முயன்ற போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
கென்யாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களின் வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.
இந்நிலையில் மகுவேனி ஆற்றை கடந்து பாதுகாப்பான இடங்களுக்கு வாகனம் மூலம் செல்ல முயன்ற மக்கள் வெள்ளம் அதிகரித்ததால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். மாயமான சுமார் 150 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.