கன்னியாகுமரியில் தொடர்ந்து பைக் சாகசத்தில் ஈடுபட்டு வந்த சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் போலீசார் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கினர்.
திங்கள்நகர் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாகசத்தில் ஈடுபட்ட சிறுவர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் மீண்டும் அதே சிறார்கள் சாகசம் செய்து வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதைக்கண்ட காவல்துறையினர் சிறுவர்களையும் அவர்களின் பெற்றோரையும் காவல்நிலையம் அழைத்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.