தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட 470 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் 470 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, கோவில்பட்டியைச் சேர்ந்த ரகுபதி, ரஞ்சித், பாண்டி மணி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.