மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் முதல் முறையாக 60 வயதான பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
அர்ஜென்டினாவில் உள்ள பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டியில், 18 வயதிலிருந்து 73 வயது வரை உள்ள பெண்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில், Alejandra Marisa Rodriguez என்ற 60 வயதான வழக்கறிஞர் வெற்றி வாகை சூடினார். அழகிப்போட்டி என்பது இளம்பெண்களுக்காக மட்டுமே என்ற கருத்தை மாற்றி, 60 வயது பெண் வெற்றி பெற்றுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.