கன்னியாகுமரி மாவட்டம், கூட்டாலுமூடு பகுதியில் உள்ள பத்ரேஷ்வரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
கூட்டாலுமூடு பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் சித்திரைத் திருவிழாவுக்கான கொடியேற்றம் தொடங்கியதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.