அயோத்தி ராமர் கோயிலில் மத்திய அமைச்சரும், அமெதி தொகுதி பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இரானி சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குழந்தை ராமர் கூடாரத்தில் இருந்து பிரமாண்ட கோயிலுக்கு பயணம் செய்த காலகட்டத்தில் தான் பிறந்ததை அதிர்ஷ்டமாக கருதுவதாக தெரிவித்தார்.
துறவிகள் மற்றும் ஞானிகள் ஆசி கிடைத்தது தமக்கு கிடைத்த பாக்கியம் என்றும், அது சரியான பாதையில் நடக்க தம்மை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடிக்காகவும், நாட்டு மக்களின் நலன்களுக்காகவும் வேண்டிக்கொண்டதாகவும் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.