தமிழக அரசு கைவைக்க கூடாத இடங்களில் கை வைப்பதாக வள்ளலார் சர்வதேச மையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை சந்தித்த தங்கர் பச்சான் தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில் வடலூரில் கட்டப்படும் வள்ளலார் சர்வதேச மையத்துக்கு பார்வதிபுரம் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து சமீபத்தில் அப்பகுதியில் தொல்லியல் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கடலூர் தொகுதி பாமக வேட்பாளரான தங்கர் பச்சன் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்தார். பொதுமக்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி என்றும் துணை நிற்கும் என கூறிய அவர் தமிழக அரசு கைவைக்க கூடாத இடங்களில் கை வைப்பதாக சாடினார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.