கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே, பெண் ஒருவர் நடமாடும் பஞ்சர் கடை வாகனத்திற்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மீனச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெயன் என்பவர், நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் அருகிலேயே தனது பஞ்சர் ஒட்டும் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். நள்ளிரவில் இவரது வாகனம் தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் ஜெயனிடம் தகவல் கூறியுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜம் என்ற பெண் வாகனத்திற்கு தீ வைத்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.