இந்தியப் பெருங்கடலின் வெப்பம் அதிவேகமாக உயர்ந்து வருவதாகவும், இதனால் பேரழிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
1920-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான நூற்றாண்டில், இந்தியப் பெருங்கடலின் வெப்பம் 1.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்துள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு நிறுவனம், சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
2100-ம் ஆண்டுக்குள் இந்த அளவு 3.8 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாகவும், இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலை உயர்வால், இந்தியப் பெருங்கடலின் மட்டம் பாதிக்கும் மேல் உயரும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.