சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 49 வருடங்கள் கழித்து அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1972 முதல் 1975 ஆண்டு வரையிலான கல்வியாண்டில் 105 பேர் பி.காம் படித்திருந்தனர். இந்நிலையில் இவர்களில் 70 பேர், சுமார் 49 வருடங்கள் கழித்து காரைக்குடியில் உள்ள தாப்பா கார்டனில் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர். அப்போது பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த அவ்ரகள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.