மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் நடிகர் சாஹில் கான் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஸ்டைல் மற்றும் எக்ஸ்கியூஸ் மீ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சாஹில் கான். இவரிடத்தில் மகாதேவ் சூதாட்ட செயலி வழக்குத் தொடர்பாக அமைக்கபட்ட சிறப்பு புலனாய்வுக் குழு சமீபத்தில் விசாரணை நடத்தியது.
இந்நிலையில் நடிகர் சாஹில் கான் மும்பைக்கு அழைத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்படும் இரண்டாவது நபர் சாஹில் கான் என்பது குறிப்பிடத்தக்கது.
15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்ற மோசடி தொடர்பாக, சாஹில் கான் உட்பட மொத்தம் 32 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.