கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக, கர்நாடக மக்கள் தற்போது வருத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, கர்நாடக மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு சீர் குறைந்து மாநிலத்தின் நிதி நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், அம்மாநிலத்தில் குண்டு வெடிப்புகளும், கொலைகளும் மிகச் சாதாரணமாக நிகழ்வதாகவும் குற்றம் சாட்டினார்.
கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுத்து மிகப் பெரிய தவறை செய்துவிட்டதாக வருந்துவதாகவும், பாஜவுக்கான ஆதரவு முன்பை விட அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கர்நாடக முதலமைச்சர் விவகாரத்தில், காங்கிரஸால் இன்னும் தீர்வு காண முடியவில்லை என்றும், முதலமைச்சர் சித்தராமையாவுக்கும், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே அதிகாரத்துக்காக ‘சண்டை’ நடந்து வருவதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.