தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத்தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து மக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று சரிவை கண்டுள்ளது. அந்த வகையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 240 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 740-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமில்லாமல் 87 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.