நெல்லையில் மது போதையில் நண்பரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
தாழையூத்து புலித்தேவர் நகரைச் சேர்ந்த சந்தன மாரிமுத்து டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவரும், இவருடைய நண்பர்களுமான பிரேம்சங்கர், ஹரி பிரகாஷ் மற்றும் இசக்கி முத்து ஆகியோர் மது அருந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், சந்தன மாரிமுத்துவை வெட்டிக் கொலை செய்துவிட்டு மற்ற 3 பேரும் தப்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பிரேம்சங்கர் மற்றும் ஹரி பிரசாத் கைது செய்யப்பட்ட நிலையில் இசக்கிமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.