நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இதுவரை இல்லாத வகையில் வெப்பம் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில், வெப்பம் குறைந்து காணப்படக்கூடிய ஊட்டியில் கூட இதுவரை இல்லாத வகையில் வெப்பம் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ஊட்டியில் 84 புள்ளி 2 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது.