தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே சாலையோர குளத்தில் பூத்துக் குலுங்கும் தாமரை மலர்கள் காண்போரை கவர்ந்திழுத்து வருகிறது.
செய்துங்கநல்லூரில் சாலையோரம் அமைந்துள்ள குளத்தில் ஏராளமான தாமரை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
காலை நேரத்தில் அனைத்து பூக்களும் தலைகளை ஆட்டியபடி நடனமாடுவதைப் போல காட்சி தருவது பலரையும் கவர்ந்து வருகிறது.
இதனால் பலரும் பூத்துக் குலுங்கும் தாமரை மலர்களைப் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.