கன்னியாகுமரியில் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது.
நாகர்கோவிலில் உள்ள காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில், மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் நடத்தப்பட்ட சிலம்பாட்ட போட்டியில், மாவட்டம் முழுவதிலும் இருந்து 118 மாணவ – மாணவியர்கள் பங்கேற்றனர்.
தொடு முறை போட்டிகள், தொழில் வரிசை, நடு கம்பு வீச்சு, காலடி வரிசை என பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகினர்.