நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே மனைவியை எரித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
அம்பல் பகுதியை சேர்ந்தவர்கள் மனோகரன் – அமுதா தம்பதி. இருவருக்கும் இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவத்தன்று சண்டை அதிகரிக்கவே ஆத்திரமடைந்த மனோகரன் அமுதாவை அடித்துக் கொலை செய்துள்ளார்.
இதையடுத்து கேஸ் சிலிண்டரின் குழாயை அமுதாவின் உடல் மீது சுற்றி தீயை வைத்து விட்டு விபத்து போல் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் அமுதாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் மனோகரனிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.