விழுப்புரம் அருகேயுள்ள வீரபாண்டி கிராமத்தில், தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில் தேர் தூக்கும் திருவிழாவில், 10 டன் எடை கொண்ட தேரினை, 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுமந்து வந்தனர்.
தேரை சுமந்தபடி சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுள்ள கிராமத்தின் சாலைகளை 3 முறை வலம் வந்தனர்.
இந்த தேர் தூக்கும் விழாவில் வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள புலிக்கல், ஒட்டம்பட்டு, அருணாபுரம், தேவனூர், நாயனூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திரெளபதி அம்மனை வழிபட்டனர்.