கோயிலுக்கு ஒரு பிரச்சனை என்றால், ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சிவனடியார்கள், முருக பக்தர்கள் உள்ளிட்ட ஆன்மீகப் பெரியோர்களை ஒருங்கிணைக்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காவல்துறை முன்னாள் ஐஜி பொன்மாணிக்கம் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,
எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கோயில் சொத்துகளுக்கோ, சிலைகளுக்கோ பிரச்சனை வந்தால், வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.