தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, கார் ஒன்று சாலைத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மகாராஜா நகரை சேர்ந்த வெங்கடேஷ், தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு விட்டு, ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நெடுங்குளம் விளக்கு பகுதியில், சாலையின் ஓரம் இருந்த தடுப்புச் சுவரில் மோதிய கார், அருகில் இருந்த குட்டையில் விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், காரின் உள்ளே இருந்தவர்களை சடலமாக மீட்டனர்.