சிவகங்கையில் கோவில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயத்தை மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
திருப்பத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ பூமாயி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
நடுமாடு பிரிவு, பூஞ்சிட்டு பிரிவு ஆகிய இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட மாட்டுவண்டி பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதன் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.