சிவகங்கையில் பதிவு எண் இல்லாத டிராக்டரை பயன்படுத்தி மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி அருகேயுள்ள மேலமனகுடி சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத டிராக்டரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ராஜேஷ் மற்றும் தங்கராஜ் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்தனர்.