சத்தீஷ்கர் மாநிலத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
பிமிதரா மாவடம் பதரா கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சரக்கு வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது, சரக்கு வாகனம் மோதியது.இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர். 23 பேர் காயம் அடைந்தனர்.