புதுச்சேரியில் வார விடுமுறை நாளை ஒட்டி, சுற்றுலாத் தலங்களில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
வெயிலின் காரணமாக பகலில் வெளியே வராத பொதுமக்கள், வெயில் குறைந்ததும் குடும்பத்தினருடன் கடற்கரைக்கு வந்தனர்.
கடலில் இறங்கிக் குளித்ததோடு, கடற்கரையில் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர், மேலும், குழந்தைகளும் அங்கு அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.