மதிப்பெண்கள் தான் முக்கியமே தவிர, என் தோற்றம் அல்ல என பொதுதேர்வில் முதலிடம் பிடித்த மாணவி பிராச்சி நிகாம், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.
உ.பி.யில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுதேர்வில் 98.50 சதவீதம் பெற்று மாணவி பிராச்சி நிகாம் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தார்.
இதனையடுத்து அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் அவரது தோற்றம் குறித்து பலர் விமர்சனம் செய்தனர்.
இதற்கு துணிச்சலாக பதிலளித்துள்ள மாணவி பிராச்சி, கிண்டல்கள் தன்னை பெரிதாக பாதிக்கவில்லை எனத் தெரிவித்தார்.