புதுச்சேரியில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையைல் முக்கிய குற்றவாளியான ரவுடி அய்யப்பன் என்பவர் தலைமறைவானார்.
இவரை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் கோவாவில் அய்யப்பன் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அய்யப்பன் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து புதுச்சேரிக்கு அவரை அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.