காரைக்காலில் புகழ்பெற்ற மாங்கனித் திருவிழா ஜூன் 19-ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு வைபவத்துடன் தொடங்குகிறது.
காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாங்கனித் திருவிழா வருகிற ஜூன் 19-ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்பு வைபவத்துடன் தொடங்க உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா ஜூன் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.