காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் போரை நிறுத்தக் கோரி போராடியதற்காக, அமெரிக்கா முழுவதும் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய போராட்டம், அமெரிக்கா முழுவதும் பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களில் பரவி வருகிறது.
அந்த வகையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன கொடியை ஏற்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.