30 வருடங்களுக்கு பிறகு ஐசிசி கிரிக்கெட் தொடரை நடத்த பாகிஸ்தான் ஆயத்தமாகி வருகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
1998-ம் ஆண்டு தொடங்கி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நிறுத்த 2018-ம் ஆண்டில் ஐசிசி முடிவு செய்தது.
பின்னர், 2025-ம் ஆண்டு முதல் சாம்பியன் டிராபி தொடரை மீண்டும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த ஐசிசி முடிவு செய்தது.
2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றதன் மூலம் 2025 போட்டியை நடத்தும் உரிமத்தை, பாகிஸ்தான் கைப்பற்றியது.
லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் போட்டிகளை நடத்தலாம் என ஐசிசிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.