ஜம்மு காஷ்மீர் உத்தம்பூர் மாவட்டம் பனாரா கிராம சுற்று வட்டார பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசாரும், உள்ளூர் இளைஞர்கள் அடங்கிய கிராம பாதுகாப்பு படையினரும் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
அப்போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் முகமது ஷெரீப் என்ற கிராம பாதுகாப்பு படை உயிரிழந்தார்.