கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கிராமப்பகுதிகளில் முறையான குடிநீர் வினியோகம் இல்லாததால் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அடுத்த சுந்தர கவுண்டனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எண்ணூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், தாராபுரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையை மறித்து மக்கள் போராட்டம் நடத்தியதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.