விண்வெளி புறக்கோள்களில் உயிர்கள் இருக்கலாம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் ஆன்லைன் உரையாடலில் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், விண்வெளியில் சுமார் 5 ஆயிரம் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
அவற்றின் வளிமண்டலத்தை பார்க்கும்போது, இந்தக் கோள்களில் சிலவற்றில் தண்ணீர் இருப்பதால், அவை வாழ்வதற்கு உகந்தவையாக இருக்கலாம் என்றும் அங்கேயும் உயிர்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.