பிரதமர் நரேந்திர மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, பிரதமர் நரேந்திர மோடி இந்திய விமானப்படை விமானங்களை பயன்படுத்துவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
மேலும் இவ்விதிமீறலானது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது என்பதால், 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா, இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்தார். மேலும் வெறுப்பு பேச்சு தொடர்பாக மனு அளிக்கப்படும் பட்சத்தில், அதுகுறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும் எனவும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.